Friday, March 4, 2011

ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்தமிழில் சினிமா வெளிவரத்துவங்கிய காலத்தில் மக்களுக்கு அறிமுகமான புராண கதைகளே திரைப்படமாயின. புராணங்களில் வரும் கடவுளர்கள் நாயகர்களாகவும் அசுரர்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். காலப் போக்கில் புராண கதைகளின் இடத்தை சமூகக்கதைகள் கைப்பற்றின. மக்களுக்கு நல்லது செய்யும் சமூககோபம் கொண்ட இளைஞன் கடவுளர்கள் வகித்த நாயகன் இடத்தை ஆக்ரமித்தான். மக்களை துன்புறுத்தும் ஜமீன்தார்களும், பண்ணையார்களும், தனிமனிதர்களும் அசுரர்களின் வில்லன் வேடத்தை தரித்துக் கொண்டனர்.

இவ்வாறு சினிமா என்ற கலை ஊடகத்தை நல்லவன்-கெட்டவன், நாயகன்-வில்லன் என்ற ஒற்றைத்தன்மையுடைய கவர்ச்சிப் பொருளாக குறுக்கியதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. இவர் படங்களில் வரும் நாயகன்(எம்.ஜி.ஆர்.) சராசரி மக்கள் விரும்புகிற ஆனால் நடைமுறையில் ஒருபோதும் அவர்களால் சாத்தியப்படாத வீரதீர பராக்கிரம காரியங்களை செய்து மக்களை ரட்சிக்கும் வீரபுருஷனாக சித்தரிக்கப்பட்டார். இவர் எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும், அது கலெக்டராக இருந்தாலும் சரி, கள்வனாக இருந்தாலும் சரி, மக்களை காத்துரட்சிக்கும் ஹீரோ பிம்பமே முன்னிறுத்தப்பட்டது. இவ்வாறு கதையை தாண்டி, கதாபாத்திரத்தை மீறி எம்.ஜி.ஆர். என்ற தனி நபரின் பிம்பம் ஒரு தேவதூதனின் பிரகாசத்துடன் ஜனங்களின் மனதில் ஆழப்பதிக்கப்பட்டது. ஏழைகளுக்கு உதவுதல், நலிந்தோருக்கு ஆறுதல் என்ற எம்.ஜி.ஆரின் சினிமாவுக்கு வெளியேயான நடவடிக்கைகள் ஹீரோயிசம் பிம்பத்தை மேலும் பிரமாண்டமாக கட்டியெழுப்ப உதவின. இதனால் எம்.ஜி.ஆர். பொதுவாழ்க்கையில் நுழைந்த போது பெருவாரியான ஜனங்களை எளிதாக தன்வசப்படுத்த அவரால் முடிந்தது.


இந்த இடத்தில் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு இயல்பான கேள்வி ஒன்று எழும். "குடிக்காதே, தர்மம் தலைகாக்கும், தாயை மதிக்க வேண்டும், உழைப்பே உயர்வு... என்பது போன்ற உயரிய கருத்துக்களை தனது படங்களின் வழியாகவும் பாடல்கள் மூலமாகவும் மக்களிடையே எம்.ஜி.ஆர் எடுத்துச் செல்லவில்லையா?" என்று, அவர்கள் கேட்கக்கூடும். ஆனால் இந்தக் கருத்துக்கள் ஒன்றும் எம்.ஜி.ஆர். கண்டுபிடித்தவை அல்ல. வள்ளுவரின் காலந்தொட்டு தமிழில் புழங்கி வருபவை. மேலும், எம்.ஜி.ஆர். படங்களில் பிரசாரம் செய்யப்பட்ட இக்கருத்துக்கள் அவரது ஹீரோயிசம் பிம்பத்தை வலுவூட்ட உதவினவே அன்றி மக்களின் அடிப்படைக் குணத்தில் சிறிய மாற்றத்தைக்கூட ஏற்படுத்தவில்லை. எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையுடன் குடிக்காதே, லஞ்சம் வாங்காதே என்பன போன்ற அவர் படங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களை நடைமுறை வாழ்வில் ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இந்த உண்மை புரியும். ஏறக்குறைய இக்கருத்துக்களை எம்.ஜி.ஆர் காரணமாக ஏற்றுக் கொண்டவர்கள் எவருமில்லை என்பதே உண்மை!

ஒருபுறம் இப்படி கதாநாயகன் பிம்பம் ஹீரோயிசம் லேபிளுடன் கட்டியெழுப்பப்பட்ட நேரம், இதற்கு நேர் எதிரான சினிமாவில் நடித்து ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டிருந்தார் சிவாஜிகணேசன். யதார்த்த வாழ்வில் எதிர்படும் சராசரி மனிதர்களின் வேடங்களே இவர் ஏற்றுக்கொண்டவை. கை இழந்தவனாக, கொலைகாரனாக, திருடனாக, அப்பராக, தியாகியாக இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதாபாத்திரங்களின் குணங்களை அக்குணங்களுக்குரிய சோகம், பலவீனம், கோபம், பொறாமை,களிப்பு, வீரம் என சகல அழுக்குகளுடனும் அற்புதங்களுடனும் வெளிப்படுத்தியது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆர். எனும் நடிகரைத் தாண்டி படங்களில் வெளிப்பட்ட அவரது ஹீரோயிசம் பிம்பம் எப்படி துதிக்கப்பட்டதோ அதற்கு நேர்மாறாக சிவாஜியின் படங்களில் சிவாஜி என்ற நடிகன் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்காக மக்களால் மதிக்கப்பட்டார்

ஜனங்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிசம்' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜய் போன்ற ஆக்ஷ்ன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியின் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.


எம்.ஜி.ஆர் தனது படங்களை அரசியல் நோக்கத்திற் காகவே பயன்படுத்தினார். அதில் தன்னை நல்லவராகவும் காட்டினர். அதே போல் நிஜவாழ்க்கையிலும் கடைப்பிடித்தார். மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இது அவரது ஹீரோயிசம் படங்கள்தான் முடிந்தது. ஆனால் இப்போதைய ரசிகர்கள் எதார்த்த சினிமாவை தான் விரும்புகிறார்கள். எம்.ஜி.ஆர்இன் பார்முலாவை பின்பற்றும் விஜய்க்கு இது கைகொடுக்குமா? என்பது சந்தேகமே!

எம்.ஜி.ஆர். வளர்த்து விட்ட ஹீரோயிசம் பிம்பத்தை ஜனங்கள் மெல்ல உதறத் தொடங்கியிரு க்கிறாக்கள். உதாரணமாக சமீபத்திய திரைப்படங்களை கூறலாம். மைனா, அங்காடித்தெரு போன்றவை வெற்றி பெற்றன. இதற்கு மாறாக 'ஹீரோயிசம்' லேபிளுடன் வந்த விஜய் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் காவலன் படத்தில் விஜய் தன்னை எதார்த்தமாக காட்டி அதில் வெற்றியும் பெற்றார். அழுக்கும் அற்புதங்களும் ஒருசேர கலந்த யதார்த்த நாயகனையே ஜனங்கள் இப்போது விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்ட 'கதை'நாயகன்கள் அதிகரிக்கும் போது 'ரீல்'ஹீரோக்கள் அரசியலில் ரியல் ஹீரோக்களாக மாறும் அபத்தம் தமிழகத்தில் குறையும்!
12 comments:

 1. உங்க கருத்துகளில் நிறைய விஷயங்கள் வேறுபட்டு உள்ளன.......இது என் கருத்து!

  சில இடங்களில் நீங்கள் காம்ப்ரமைஸ் ஆகி உள்ளீர்கள் மன்னிக்கவும்!

  ReplyDelete
 2. விக்கி உலகம் said...

  ஹீரோயிசம் படத்தின் அன்றைய விளைவுகளையும் இன்றைய விளைவுகளையும் தான் எழுதினேன்

  இப்பதிவில் எம்.ஜி.ஆரை தவறாக விமர்சிக்கவோ அல்ல அவரை பாராட்டவோ எழுதவில்லை

  ReplyDelete
 3. இன்னும் கொஞ்சம் விரிவாக அலசி இருக்கலாம். மசாலாத்தனங்கள் நிறைந்த ஹீரோயிச படங்கள் இன்னும் வெற்றிப் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மைனா, அங்காடித்தெரு போன்ற படங்கள் ஓடுவதை வைத்துக் கொண்டு ரசிகர்களின் ரசனை மேம்பட்டு விட்டது என்று கூற முடியாது. இது போன்ற படங்கள் தமிழ்சினிமாவில் எல்லாக் காலங்களிலும் வந்து கொண்டுதான் இருக்கின்றது. வெற்றியும் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. உதிரிப் பூக்கள், முதல் மரியாதை, நாயகன், மகாநதி, சேது, அழகி, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், இப்போதைக்கு ஞாபகம் வந்தவை இவ்வளவுதான்.

  ஃபாண்ட் சைசை கொஞ்சம் பெரிது படுத்தலாமே?

  ReplyDelete
 4. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே ......

  ReplyDelete
 5. சரியான சாட்டையடி அலசல் சூப்பர் மக்கா....

  ReplyDelete
 6. பன்னிகுட்டி[ஜாம்பவான்] கமெண்ட்ஸ் நோட் பண்ணிக்குங்க நர்மதன்....

  ReplyDelete
 7. MANO நாஞ்சில் மனோ said... பன்னிகுட்டி[ஜாம்பவான்] கமெண்ட்ஸ் நோட் பண்ணிக்குங்க நர்மதன்....

  ok sir

  ReplyDelete
 8. See.,

  http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_2646.html

  ReplyDelete
 9. மக்கள் திலகம் பற்றி நல்ல பதிவு நண்பா!

  ReplyDelete
 10. மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை

  உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete