Wednesday, April 27, 2011

தனுஷ்க்கு ரஜினி சிபாரிசு கடுப்பில் சிரஞ்சீவிரஜினி சிரஞ்சீவி நட்பில் பெரிய விரிசல்! கோடம்பாக்கத்தில் இது குறித்துதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்போது. தனது மகன் ராம் சரண் நடிக்கும் படமான மஹதீரா படத்தை தமிழில் மாவீரன் என்ற பெயரில் சிரஞ்சீவி வெளியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முதலில் அழைக்கப்பட்டவர் ரஜினி என்பதும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் கடைசி நேரத்தில் இதில் கலந்து கொள்ள இயலாது என்று கைவிரித்துவிட்டார் ரஜினி. இதை எப்படி எடுத்துக் கொண்டாராம் சிரஞ்சீவி? அது பற்றி அலசுகிற பத்திரிகையாளர்கள் தங்கள் காதுக்கு வந்த தகவல்களைதான் மாறி மாறி கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.அவர் ஏன் வரவில்லை என்பதை பற்றி பிறகு பார்க்கலாம். ரஜினி மறுத்துவிட்டார் என்பதை அறிந்தவுடன் சிரஞ்சீவி சொன்ன வார்த்தை, 'இனிமே அவரை கூப்பிடாதீங்க. விட்ருங்க. கமல் வருவாரான்னு மட்டும் கேளுங்க' என்றாராம். அப்புறம் கமல் வந்தார், வாழ்த்தினார் என்பதையெல்லாம் நாடறியும்.

இருவருக்குமான இந்த பிணக்கு எங்கிருந்து துவங்கியது என்பதை ஆராய்ந்த திரையுலகத்தினர் சொன்ன தகவல்தான் இப்போது மிக முக்கியமான விஷயமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மருமகன் தனுஷ§க்கு ரஜினி வெளிப்படையாக சப்போர்ட் செய்வதில்லை என்றாலும் அவரது வளர்ச்சியை மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறார். மறைமுகமாக சில உதவிகளையும் செய்து வருகிறாராம். அதனால்தான் பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்று ரஜினி பட தலைப்புகளில் தனுஷால் சுலபமாக நடிக்கவும் முடிந்திருக்கிறது.

ரஜினி நடித்த பழைய 'மாப்பிள்ளை' படத்தை தயாரித்தது சிரஞ்சீவிதான். ஒரு முக்கியமான காட்சியில் தோன்றி அவரே சண்டையும் போடுவார். இதற்கு தமிழகத்திலும் ஆந்திராவிலும் பெரிய வரவேற்பு இருந்தது. அதே மாதிரி மருமகன் தனுஷின் மாப்பிள்ளையிலும் குறிப்பிட்ட காட்சியில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தோன்றி ஃபைட் செய்ய வேண்டும் என்று விரும்பினாராம் ரஜினி. இவரே இது குறித்து சிரஞ்சீவியிடம் பேசியும், என் பையனை நான் கோலாகலமாக தமிழில் அறிமுகப்படுத்தப் போறேன். இந்த நேரத்தில் இவ்வளவு சாதாரணமாக அவன் வருவதை நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம் சிரஞ்சீவி.


ரஜினி கடைசி நேரத்தில் விழாவுக்கு வர மறுத்தது இதனால் கூட இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்திருந்தால், இந்த நிகழ்ச்சிக்கு வரவே ஒப்புக் கொண்டிருக்க மாட்டார் ரஜினி. எனவே இப்படி கூறப்படுகிற தகவல்கள் எதிலும் உண்மையில்லை. அவரது புகழுக்கு எதிரானவர்கள் கிளப்பிவிடுகிற வதந்திதான் இது என்றும் கூறுகிறார்கள். (இதையே எத்தனை தடவை சொல்லுவீங்க)

ரஜினி என்றாலே ஹேஷ்யமும், மர்மமும் தலைவிரித்தாடுவது இயற்கைதானே!
நன்றி: தமிழ்சினிமா.காம்