சினிமா..சினிமா... வெளிநாட்டு படங்களின் கதைகளை காப்பி அடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. ஹாலிவுட், கொரியா, ஜப்பான், ஈரான், ஆப்பிரிக்கா, பிரான்ஸ் நாட்டு படங்களின் கதையை திருடும் போக்கு இந்தி சினிமாவில்முதலில் ஆரம்பித்தது. வெளிநாட்டு படங்களைப் பார்த்து அதை நமது ரசிகர்களுக்கு ஏற்ப மாற்ற அமைப்பார்கள். அதே பாணியை தமிழ் சினிமா இயக்குனர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் குறைவான படங்களிலேயே இதை காண முடிந்தது. நாயகன் படம் ஹாலிவுட¢டில் வெளியான காட்ஃபாதர் படத்தின் காப்பி. ஹெல்ட் ஹாஸ்பேஜ் என்ற ஹாலிவுட் படமே ரோஜா. அமேரோஸ் பெரோ என்ற பிரேசல் படம் ஆய்த எழுத்து, புதுப்பேட்டை - சிட்டி ஆஃப் காட், கஜினி - மெமன்டோ, அந்நியன் - செவன், பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ், வேட்டையாடு விளையாடு - தி பான் கலெக்டர் ஆகிய படங்களை தழுவி எடுக்கப்பட்டவை.
புதுப்பேட்டை - சிட்டி ஆஃப் காட்
கஜினி - மெமன்டோ
அந்நியன் - செவன்
பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்
வேட்டையாடு விளையாடு - தி பான் கலெக்டர்
அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர்
தாம் தூம் - ரெட் கார்னர்
சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட்
வெளிநாட்டு படங்களை காப்பி அடிக்கும் இந்த முறை அவ்வப்போதுதான் நடந்து வந்தது. ஆனால் கடந்த இரு ஆண்டு வெளியான பல படங்கள் இந்த காப்பி பாணியை பின்பற்றி வெளியாகியுள்ளன. அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர், தாம் தூம் - ரெட் கார்னர், சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட், ‘வேகம்’, புது நாயகன் - செல்லுலார் ஆகிய படங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ரவிக்குமாரின் ஜக்குபாய், வாசாபி என்ற பிரெஞ்சு படத்தையும் நந்தலாலா, கிக்கி ஜீரோ என்ற ஜப்பானிய படத்தையும் தழுவி எடுக்கப்பட்டது. யோகி ஆப்பரிக்க படத்தின் தழுவல் என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஏராளாமான கதாசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனாலும¢ கதைக்கான புகழ் அனைத்தும் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என இயக்குனர்கள் விரும்புகிறார்கள். விரைவாக படத்தை முடிக்க வேண்டிய அவசரம் இருப்பதால் சிந்தனைக்கு வேலை தருவதை தவிர்த்து, வெளிநாட்டு படங்களை உல்டா செய்து விடுகின்றனர் என்கிறது கோடம்பாக்கம்.
ஒவ்வொரு முறை இந்த காப்பியடிக்கும் டிரெண்ட் குறித்து கேள்வி எழும்போதும் அந்த படத்தின் கதையை இன்ஸ்பிரேஷனாக மட்டுமே கொண்டு இயக்கியுள்ளேன்ர என இயக்குனர்கள் விளக்கம் தருகிறார்கள். சிலரோ, ‘இது மதுரை அருகே நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்’ என்று சொல்வார்கள். ஆனால், இன்னொருவரின் உழைப்பை, மூளையை திருடுவதை விட நம்மிடம் உள்ள திறமையான கதாசிரியர்களை பயன்படுத்திக் கொள்வதே இந்திய/தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் தரும்’ என்கிறார்கள் சில சினிமா விமர்சகர்கள்.
தரவுகளுக்கு நன்றி: இணையம்
முத வெட்டு
ReplyDelete>>>அந்நியன் - செவன்
ReplyDeleteபட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்
அட.. இது நான் கேள்விப்படாதது..
வாருங்க சி.பி சார்
ReplyDeleteஅடப்பாவமே.....எல்லாம் காப்பிதானா....?
ReplyDeleteஅட கொன்னியா இந்த அநியாயத்தைதான் இத்தனை நாலா செஞ்சுட்டு இருக்கானுகளா நாதாரிங்க....
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி and MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி நண்பர்களே
நிறைய படஙக்ள் சுத்தமாய் தவறு.
ReplyDelete@ Cable Sankar
ReplyDeleteநான் கேள்வி பட்டதையே போட்டேன்
என்ன தவறு என்பதை நீங்களே கூறுங்கள்
nalla news, padathai copy adithuvittu award venumaam. nalla irukku
ReplyDelete